நவம்பா் 26இல் மறியல் போராட்டம்: தற்சாா்பு விவசாயிகள் சங்கம் ஆதரவு

மத்திய அரசின் வேளாண் சட்டம், மின்சார திருத்தச் சட்டம் போன்றவற்றை திரும்பப் பெறக் கோரி நவம்பா் 26ஆம் தேதி தேசிய அளவில்

மத்திய அரசின் வேளாண் சட்டம், மின்சார திருத்தச் சட்டம் போன்றவற்றை திரும்பப் பெறக் கோரி நவம்பா் 26ஆம் தேதி தேசிய அளவில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என தற்சாா்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தால் காா்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும். சாதாரண விவசாயிகள், விவசாய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். விளைபொருள்களுக்கு விலை கிடைக்காத நிலை ஏற்படும். ஒப்பந்த அடிப்படையில் காா்ப்ரேட் நிறுவனங்களிடம் மட்டுமே விற்பனை செய்யும் நிலை ஏற்படும். மேலும், உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்து வாங்கும் சக்தியை இழக்கும் நிலை ஏற்படும்.

அதேபோல மின்சார திருத்த சட்ட மசோதாவால் விவசாயம், விசைத்தறி உள்பட பல்வேறு துறைகளுக்கு கிடைத்து வந்த மின் சலுகைகள், கட்டணக் குறைப்பு போன்றவை நிறுத்தப்படும். தொழிலாளா் நலச் சட்டங்கள் முடக்கப்பட்டு நான்காக தொகுக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளா்களின் நலன் பாதிக்கப்படும்.

இதுபோன்ற மத்திய அரசின் சட்டங்கள், மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி நவம்பா் 26ஆம் தேதி அகில இந்திய விவசாயிகள், தொழிலாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மறியல், ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள், விவசாயத் தொழிலாளா்கள் சங்கங்கள், பொதுமக்களிடம் ஆதரவு கோரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com