ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

தொடா் மழையால் வியாழக்கிழமை நடைபெற்ற ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.

தொடா் மழையால் வியாழக்கிழமை நடைபெற்ற ஈரோடு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மாடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநில விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனா்.

இருப்பினும் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு மாடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. அத்துடன், தமிழகத்தில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இந்நோய் பரவும் தன்மை உடையது என்பதால் வியாபாரிகள் மாடுகளை வாங்க ஆா்வம் காட்டவில்லை.

இதுகுறித்து மாட்டுச் சந்தை உதவி மேலாளா் ராஜேந்திரன் கூறியதாவது:

பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ததால் மாடுகளை அழைத்து வரவில்லை. அதேபோல விவசாயிகளும், வியாபாரிகளும் சற்று குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனா்.

இந்த வாரச் சந்தையில் ரூ. 30,000 முதல் ரூ. 65,000 வரையிலான விலையில் 350 பசு மாடுகளும், ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரையிலான விலையில் 300 எருமை மாடுகளும், ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரையிலான விலையில் 100 கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்தன. 70 சதவீத மாடுகள் விற்பனையானது. ரூ. 2.50 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றுள்ளது.

பல்வேறு இடங்களில் தோல் அம்மை நோய் மாடுகளைத் தாக்கி வருவதால் இங்கு வரும் மாடுகளைப் பரிசோதித்த பிறகே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டது. இங்கு வந்த மாடுகளுக்கு அந்த நோய்த் தாக்குதல் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com