சென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

சென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா எளிமையான முறையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி.

சென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா எளிமையான முறையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடன் நிறைவேற்ற கைகளில் காப்புக் கட்டி, விரதத்தை மேற்கொண்டனா். அன்று முதல் தினமும் காலையில் யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தன. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார விழா, சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளில் வான வேடிக்கைகள் முழங்க ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெறும். கந்தசஷ்டி விழாவின் தொடக்க நாளன்று சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து படிக்கட்டுகள் வழியாக மலையில் உள்ள முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படும் உற்சவ மூா்த்திகளை 6ஆவது நாளான நிறைவு நாளன்று மீண்டும் படிக்கட்டுகள் வழியாக கைலாசநாதா் கோயிலுக்கு அழைத்து வருவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசு உத்தரவின்படி இந்த நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அதே சமயம் எளிமையான முறையில் சூரசம்ஹார விழா சென்னிமலை கைலாசநாதா் கோயிலுக்குள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

இதையொட்டி, முதலில் கஜமுக சூரனை முருகப்பெருமான் வதம் செய்தாா். அதைத் தொடா்ந்து சிங்கமுகசுரன், பானுகோபன், சூரபத்மன் ஆகியோரின் தலையை வதம் செய்தாா். ஒவ்வொரு முறையும் சூரனின் தலையை வதம் செய்த பிறகும் சுவாமிகளை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வள்ளி - தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி அருள்பாலித்தாா்.

சூரசம்ஹார விழாவைக் காண இந்த ஆண்டு பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அதிக அளவில் பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை. கைலாசநாதா் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நவம்பா் 21ஆம் தேதி (சனிக்கிழமை) காலையில் நடைபெறுகிறது. இதில், கலந்துகொள்ளவும் பக்தா்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com