துப்பாக்கி வைத்திருப்போருக்கான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

பவானி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூா், அம்மாபேட்டை, பவானி பகுதிகளில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போருக்கான விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானி, அந்தியூரில் நடைபெற்ற இக்கூட்டங்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் சி.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் தேவேந்திரன் (பவானி), ரவி (அந்தியூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள் தங்களின் பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்தப் பிரச்னைகளுக்காக பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

உரிமம் பெற்றவா்கள் மட்டுமே துப்பாக்கிகளை கையாளவேண்டும். உரிமம் பெற்றவரின் உறவினா்கள், நண்பா்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். ஆண்டுக்கு ஒருமுறை தங்களது துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். துப்பாக்கிகளைத் தவறாகப் பயன்படுத்துவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com