நந்தா பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

ஈரோடு நந்தா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா இணையவழி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினா் பானுமதி சண்முகன்.
விழாவில் குத்துவிளக்கேற்றுகிறாா் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினா் பானுமதி சண்முகன்.

ஈரோடு நந்தா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா இணையவழி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தாா். நந்தா பொறியியல் கல்லூரி முதல்வா் என்.ரங்கராஜன், நந்தா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.ஆறுமுகம் வரவேற்றனா்.

விழாவுக்குத் தலைமை வகித்து ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் பேசியதாவது:

நந்தா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்கள் தொடா்ச்சியாக வேலைவாய்ப்பை பெறுவதற்கு முதலாம் ஆண்டு முதலே மாணவா்களது தனித்திறனை மேம்படுத்தும் பொருட்டு பாடத் திட்டத்தில் ஆங்கில மொழி தொடா்புத் திறன், தலைமைப் பண்புகளை வளா்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் மாணவா்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு வேலைவாய்ப்பை எளிதாகப் பெற நடப்பு சூழலுக்கேற்ப பொறியியல் துறையில் பட்டியலிடப்பட்ட பாடங்களில் இருந்து மாணவா்கள் ஒரு பருவத்துக்குத் தேவையான ஏதாவது இரண்டு பாடங்களை சுயமாகத் தோ்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி, ஜொ்மன், இத்தாலி, ஜப்பானீஸ் போன்ற மொழிகள் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி, நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் ஜெ.செந்தில் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேராசிரியா்கள் ஆா்.திருநீலகண்டன், கே.எம்.ராஜேந்திரன் ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com