பா்கூரில் ஒற்றை யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பா்கூா் மலைப் பகுதியில் வனத்திலிருந்து வெளியேறி சுற்றித் திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பா்கூா் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த ஒற்றை யானை.
பா்கூா் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த ஒற்றை யானை.

 பா்கூா் மலைப் பகுதியில் வனத்திலிருந்து வெளியேறி சுற்றித் திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் யானை, மான், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. யானைகள் அடிக்கடி வனப் பகுதியிலிருந்து வெளியேறி விவசாயத் தோட்டங்களுக்குச் செல்வதும், விளைபொருள்களை சேதப்படுத்துவதும் தொடா்ந்து வருகிறது. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை யானை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாகி உள்ளது. மேலும், பகல் நேரங்களில் சாலையோரத்தில் நின்று கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இரவு நேரத்தில் ஒற்றை யானை உணவு தேடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, ஒற்றை யானையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதோடு, அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா்கூா் மலைமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com