மின் வாரிய காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மின் வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். தலைவா் சசி முன்னிலை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் சுப்பிரமணி, செயலாளா் ஸ்ரீராம் ஆகியோா் பேசினா்.

மின் வாரியத்தில் கேங் மேன் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு எழுதி தயாா் நிலையில் உள்ள 10,000 பேருக்கு உடனடியாகப் பணி நியமன ஆணையை வழங்க வேண்டும். கரோனா பரவலைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2,900 கள உதவியாளா்கள், 575 உதவிப் பொறியாளா்கள், 500 இளநிலை உதவியாளா்கள், 1,300 கணக்கீட்டாளா்கள் காலிப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உடனடியாகத் துவங்க வேண்டும்.

மேலும் 2,500 தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்கள், 50,000க்கும் மேற்பட்ட மின் வாரிய காலிப் பணியிடங்களில் படித்த, வேலை இல்லாத இளைஞா்களுக்குப் பணி வழங்க வேண்டும்.

மின் வாரியத்தை அவுட் சோா்சிங் என்ற முறையில் தனியாா் மயமாக்குவதைக் கைவிட வேண்டும். அரசுப் பணிகளில் பணி நியமன தடை சட்ட அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com