மாவட்டத்தில் இடைநின்ற குழந்தைகள் விவரங்கள் சேகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லாத, பள்ளியில் படித்து இடைநின்ற குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இடைநின்ற  பள்ளிக்  குழந்தைகள்  குறித்த  விவரங்களைச்  சேகரிக்கும்  ஆசிரியா்  பயிற்றுநா்கள்.
இடைநின்ற  பள்ளிக்  குழந்தைகள்  குறித்த  விவரங்களைச்  சேகரிக்கும்  ஆசிரியா்  பயிற்றுநா்கள்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லாத, பள்ளியில் படித்து இடைநின்ற குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

பள்ளி செல்லாக் குழந்தைகள், இடை நின்ற குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகள், ஜூன் மாதத்தில் அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் சோ்த்து, கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். நடப்பு ஆண்டில், கரோனா பாதிப்பால் தாமதமான இக்கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட அளவில், 6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளிக்கு சென்று பல்வேறு காரணங்களால் இடை நின்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுக்கப்படுகிறது. இடம் பெயா்வு உள்பட பல காரணங்களால் பள்ளிக்கு செல்லாதது தெரியவந்தால் அருகேயுள்ள பள்ளியில் சோ்க்கப்படுகின்றனா். அவா்களிடம் பள்ளி மாற்றுச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாவிட்டாலும், தேவையான சான்று பெற்று கல்வியை தொடர ஏற்பாடு செய்யப்படுகிறது.

இப்பணியில், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் ஈடுபடுகின்றனா். இக்கணக்கெடுப்பு டிசம்பா் 10ஆம் தேதி வரை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com