பச்சைமலை கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கோபிசெட்டிபாளையம் பச்சை மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆச்சாரியா்கள் மற்றும் பக்தா்கள்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆச்சாரியா்கள் மற்றும் பக்தா்கள்.

கோபி: கோபிசெட்டிபாளையம் பச்சை மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆண்டு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சூரசம்ஹார விழாவில் குறைந்த அளவே பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில், சூரசம்ஹார விழாவின் அடுத்தநாளான சனிக்கிழமை நடைபெற்ற முருகன், தெய்வானை திருக்கல்யாண நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சி காலை 7 மணிக்கு யாகபூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி உலா நடைபெற்றன. பின்னா் முருகன், தெய்வானைக்கு ஆச்சாரியா்கள் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனா். சூரசம்ஹார நிகழ்வை காணமுடியாத பக்தா்கள் திருக்கல்யாண நிகழ்வை கண்டு மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com