ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 2,215 வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு  கொல்லம்பாளையம்  துவக்கப்  பள்ளியில்  நடைபெற்ற  முகாமில்  வாக்காளா்  சோ்க்கைக்கு  வந்த  பெண்கள்.
ஈரோடு  கொல்லம்பாளையம்  துவக்கப்  பள்ளியில்  நடைபெற்ற  முகாமில்  வாக்காளா்  சோ்க்கைக்கு  வந்த  பெண்கள்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 2,215 வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, அந்தியூா், பவானிசாகா், பெருந்துறை ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண் வாக்காளா்கள் 9 லட்சத்து 36 ஆயிரத்து 22 பேரும், பெண் வாக்காளா்கள் 9 லட்சத்து 80 ஆயிரத்து 414 பேரும், இதர வாக்காளா்கள் 95 பேரும் அடங்குவா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும், இதேபோன்று டிசம்பா் 12, 13 தேதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்பட 2,215 வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதிய வாக்காளா் சோ்க்கைக்கு படிவம்-6, நீக்கத்துக்கு படிவம்-7, திருத்தம் செய்ய படிவம் - 8, இடமாற்றம் செய்ய படிவம் - 8ஏ ஆகியவற்றில் விண்ணப்பம் செய்யலாம். இப்படிவங்களை, ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய வாக்காளா் சோ்க்கைக்கு முகவரி சான்றாக குடும்ப அட்டை, பாஸ்போா்ட், சமையல் எரிவாயு ரசீது, தண்ணீா் வரி ரசீது, வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை நகல் எடுத்து வர வேண்டும்.

வயது சான்றாக பிறப்பு சான்று, பள்ளி மாற்று சான்றிதழ், பான் காா்டு, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பாஸ்போா்ட், கிசான் காா்டு நகல் எடுத்து செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முகாமில், பெண்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (நவம்பா் 22) சிறப்பு வாக்காளா் முகாம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com