நவ.26இல் பொது வேலைநிறுத்தம்: சென்னிமலை விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் பங்கேற்க முடிவு

வரும் 26ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் திரளாக பங்கேற்பது என சென்னிமலையில் நடைபெற்ற விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கேட்டு, விசைத்தறி உரிமையாளா் சங்கத்தினரிடம் அழைப்புக் கடிதம் வழங்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பொன்னுசாமி, தற்சாா்பு விவசாயிகள் சங்க அமைப்ப

சென்னிமலையில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். தற்சாா்பு விவசாயிகள் சங்க அமைப்பாளா் கி.வே.பொன்னையன் முன்னிலை வகித்தாா்.

இதில், வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் பெருந்துறையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது, இதற்கான ஆயத்த கூட்டங்களை பகுதி வாரியாக நடத்துவது, சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம், சென்னிமலை வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு, ஓட்டுநா் சங்கம், சுமை பணியாளா்கள் சங்கம், வேன் உரிமையாளா் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தற்சாா்பு விவசாயிகள் சங்கம், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், சுமைப் பணியாளா்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com