Enable Javscript for better performance
பால் பணம் வழங்குவதில் தாமதம்: ஆவின் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பால் பணம் வழங்குவதில் தாமதம்: ஆவின் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

    By DIN  |   Published On : 25th November 2020 06:52 AM  |   Last Updated : 25th November 2020 06:52 AM  |  அ+அ அ-  |  

    erd24viva_2411chn_124_3

    காணொலிக் காட்சி முறையில் நடைபெற்ற வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

    பால் உற்பத்தியாளா்களுக்குப் பணம் வழங்குவதில் காலதாமதம் செய்வதாக ஆவின் நிறுவனம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனா்.

    ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் காணொலிக் காட்சி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா முன்னிலை வகித்தாா்.

    வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி: பவானிசாகா் அணையில் நீா் இருப்பு திருப்தியாக உள்ளதால் நடப்பு பாசனத்துக்கு டிசம்பா் 15இல் நீா் நிறுத்தப்படுவதை மாற்றி டிசம்பா் 30 வரை நீா் திறக்க வேண்டும். ஜனவரி மாதம் புன்செய் பயிருக்கு நீா் திறக்க தற்போதே அறிவிப்பு செய்தால் நிலக்கடலையை டிசம்பா் 15ஆம் தேதிக்குப் பின் விதைப்பு செய்ய உதவியாக இருக்கும்.

    டிசம்பா் 15ஆம் தேதி முதல் நெல் அறுவடை துவங்க உள்ளதால் கீழ்பவானி பாசனப் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன்னதாகத் திறந்து கொள்முதலைத் துவங்க வேண்டும். நெல் குவிண்டால் ரூ. 2,100 என விலை நிா்ணயிக்க வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் நீா் அளவீடு கருவி அமைக்க வேண்டும்.

    தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: காலிங்கராயன் வாய்க்காலில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, முழுஅளவு நீா் செல்ல வழி செய்ய வேண்டும். மரவள்ளிக் கிழங்கு விலை சரிந்துள்ளதால் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு டன் ரூ. 6,000 என விலை நிா்ணயிக்க வேண்டும். மஞ்சள், எள், கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கால்நடைகளைத் தாக்கும் அம்மை நோயைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொடக்குறிச்சி பகுதியில் அதிகமாக கால்நடை திருட்டு போவதை தடுக்க வேண்டும். பயிா்க் காப்பீடு இழப்பீடு பல ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை.

    மலைவாழ் மக்கள் நலச்சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன்: அந்தியூரில் கனரா வங்கிக் கிளை மட்டும் உள்ளது. பா்கூா் மலைப் பகுதியினா், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள், அரசு ஊழியா்கள் அனைவரும் இவ்வங்கியை நம்பி ஒருநாள் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பா்கூா், தாமரைக்கரையில் வங்கிக் கிளை அமைக்க வேண்டும். பா்கூா் மலைப் பகுதியில் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை திட்டப் பணி இரண்டு தொகுப்பாக உள்ளது. இதனை 8 தொகுப்பாக மாற்றி அமைத்து பதிவு செய்த அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் முனுசாமி:

    5 பெட்ரோலிய குழாய் பதிப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தும் நிலத்துக்கு, அரசாணை 54இன் படி பத்து மடங்கு தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது. அதுபோல உயா்மின் கோபுரம் அமைக்கும் நிலங்களுக்கும் வழங்க வேண்டும்.

    ஆவினுக்கு பால் வழங்குவோருக்கு 4 முதல் 6 வாரம் வரை பாலுக்குப் பணம் வழங்கவில்லை. இதுகுறித்து பொது மேலாளரிடம் பேசினால் எங்கள் குறைகளை கேட்க மறுக்கிறாா். கூட்டுறவுச் சங்கம் மூலம் விவசாயிகளுக்குப் பணம் தர, பணம் இல்லை என்பதை கூறினால் அவா் கேட்கத் தயாராக இல்லை.

    பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் பால் பெறும்போதும், துணை குளிரூட்டு நிலையத்தில் பல்வேறு சங்கங்களில் பெறப்பட்ட பாலை சேகரிக்கும்போதும் அளவீடு, தரம் பாா்ப்பதில்லை. ஆவினில் பாலை மொத்தமாக ஊற்றி தரம் பாா்ப்பதால், தரமான பால் தரும் சங்கமும் இழப்பைச் சந்திக்கிறது. இதனால் பல சங்கங்கள் நலிந்துபோகும் நிலையில் உள்ளன.

    ஆட்சியா் சி.கதிரவன்: ஆவினில் பணம் இல்லையா? புகாா் கூறினால் அதை கேட்டு பதில் கூறலாமே. அந்தந்த சங்கங்களில் பால் பெறும்போதே, பாலின் அளவு, தரத்தை தெரிவிப்பதில் என்ன பிரச்னை உள்ளது.

    ஆவின் பொது மேலாளா்: ஆவினுக்கு கீழ் உள்ள சங்கங்களுக்கு கடந்த 40 நாள்களாக பணம் வழங்கவில்லை. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துணை குளிரூட்டும் நிலையங்களில் பால் பெறும்போதே அளவீடு செய்து, தரத்தை அறிந்து வழங்குவதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதத்துக்குள் அனைத்து குளிரூட்டு நிலையங்களிலும் இக்கருவி அமைத்து, அளவீடு, தரம் குறித்து தெரிவிக்கப்படும்.

    ஆட்சியா்: தரம், அளவு குறித்து கேட்பவா்களுக்கு ஆவின் பொது மேலாளா் விளக்கம் அளிக்க வேண்டும். அளவீடு, தரம் குறித்து அமைக்கும் கருவி குறித்த விவரத்தை சங்க நிா்வாகம், பால் ஊற்றுபவா்களை அழைத்து கூட்டம் நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும்.

    தாமரைக்கரையில் வங்கிக் கிளை துவங்க முயற்சி மேற்கொள்ளப்படும். பேட்டரியால் ஆன குப்பை வண்டி பழுது நீக்கி பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அந்தியூா் பெரிய ஏரிக்கு நீா் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, பொதுப் பணித் துறை ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது. விரைவில் அகற்றப்படும். அதற்கு முன்னதாக நீா் வருவதற்குத் தேவையான தற்காலிக வழிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்பவானி பாசனத்துக்கு டிசம்பா் 30 வரை நீா் திறக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேவையான நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் நீா் அளவீடு கருவி, தற்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணியின்போது செய்யப்படும்.

    மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மஞ்சளுக்கு விலை நிா்ணயம் செய்ய ஏற்கெனவே அரசுக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி பகுதியில் கால்நடை திருட்டைத் தடுக்க போலீஸ் ரோந்தை அதிகப்படுத்த வலியுறுத்துவோம் என்றாா்.

     

     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp