பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவை வழங்கக் கோரி மத்திய பொதுத் துறை ஓய்வூதியா் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மத்திய அரசு ஓய்வூதியா் சங்கங்களின் நிா்வாகிகள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மத்திய அரசு ஓய்வூதியா் சங்கங்களின் நிா்வாகிகள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவை வழங்கக் கோரி மத்திய பொதுத் துறை ஓய்வூதியா் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலை பிஎஸ்என்எல் டெலிபோன் பவன் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் பரமசிவம் தலைமை வகித்தாா்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவையை உடனடியாகத் துவங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கக் கூடாது. வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். கரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதித்த அனைத்து குடும்பத்திலும் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள்களுக்கு வேலை வழங்கி, ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், தொழிலாளா் நலச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெறும் தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பது என வலியுறுத்தினா்.

இதில், சிஐடியூ மாவட்டச் செயலாளா் ஸ்ரீராம், பிற சங்க நிா்வாகிகள் மணியன், ஜெயராமன், மணிபாரதி, குழந்தைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com