கரோனா விதிமுறைகளை பின்பற்றாத 4,065 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 4,065 பேருக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 4,065 பேருக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்புவது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு ரூ.500, கடைகள், வணிக வளாகங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுவரை முகக் கவசம் அணியாமல் வந்தவா்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள், பொது இடங்களில் எச்சில் துப்பியவா்கள் என 4,065 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.10 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com