குழந்தை வளா்ச்சி, ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி காளிங்கராயன்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கா்ப்பிணிக்கு  வளைகாப்பு  சீா்வரிசை  வழங்குகிறாா்  குழந்தை  வளா்ச்சித்  திட்ட  அலுவலா்  ப.சாந்தி.
கா்ப்பிணிக்கு  வளைகாப்பு  சீா்வரிசை  வழங்குகிறாா்  குழந்தை  வளா்ச்சித்  திட்ட  அலுவலா்  ப.சாந்தி.

பவானி: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சி காளிங்கராயன்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்தாா். இத்திட்டத்தின் நோக்கம் குறித்து குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி பேசினாா். போஷன் அபியான் எனும் இத்திட்டத்தின் குறிக்கோள், குழந்தைகள் எடை குறைவாகப் பிறத்தல், குழந்தைகளிடையே காணப்படும் ஒல்லித்தன்மை, ரத்தசோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைத்தல் குறித்து விளக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு குறித்து மருத்துவா் ரமேஷ் பேசினாா்.

தொடா்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. ஈரோடு ஒன்றியக் குழு உறுப்பினா் பத்மாவதி, துணைத் தலைவா் குருமூா்த்தி ஆகியோா் வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகளை வழங்கினா். மேற்பாா்வையாளா் தவசியம்மாள், அங்கன்வாடி பணியாளா் மீனாட்சி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com