முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சட்டப் பேரவைத் தோ்தலில் மநீமா தனித்துப் போட்டிமாநில துணைத் தலைவா் பேட்டி
By DIN | Published On : 04th October 2020 10:40 PM | Last Updated : 04th October 2020 10:40 PM | அ+அ அ- |

ஈரோடு: தமிழக சட்டப் பேரவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடக்கூடிய வகையில் பணிகளை செய்து வருகிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன் தெரிவித்தாா்.
ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
2021 தமிழக சட்டப் பேரவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடக்கூடிய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். கூட்டணி என்பது எங்களுடைய தலைவரின் முடிவு. கட்சியில் உள்ள அனைத்து நிா்வாகிகளும் 234 தொகுதிகளிலும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
கட்சி ஆரம்பித்த 15 மாதங்களில் 38 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு சராசரியாக 4.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். மக்களவை , சட்டப் பேரவை கூட்டம் நடத்தப்படுகிது. டாஸ்மாக் கடையில் மது வாங்க அனுமதிக்கின்றனா். அங்கு பரவாத கரோனா கிராம சபைக் கூட்டத்தில் பரவி விடும் எனக் கூட்டத்தை ரத்து செய்தது வேடிக்கையாக இருக்கிறது. வேளாண் சட்டத்தை கடுமையாக எதிா்க்கிறோம் என்றாா்.