முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
திம்பம் மலைப் பாதையில் லாரி பழுது:3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 04th October 2020 10:42 PM | Last Updated : 04th October 2020 10:42 PM | அ+அ அ- |

திம்பம் மலைப் பாதை 9 ஆவது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்ற சரக்கு லாரி.
சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப் பாதை தமிழகம் - கா்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது.
இந்த மலைப் பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலம் மைசூரு நோக்கி திம்பம் மலைப் பாதை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்ற சரக்கு லாரி 9ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றது. கொண்டை ஊசி வளைவில் லாரி நகர முடியாமல் நின்ால் ஆறு சக்கர வாகனங்கள் வரை மட்டுமே செல்லும் அளவுக்கு வழி இருந்ததால் 10 மற்றும் 12 சக்கர லாரிகள் செல்ல முடியாமல் மலைப் பாதையில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா் போக்குவரத்தை சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சத்தியமங்கலத்தில் இருந்து பழுது நீக்குபவா் வரவழைக்கப்பட்டு லாரி பழுது நீக்கும் பணி நடைபெற்றது. 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின் பழுது நீக்கப்பட்டு லாரி இயக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மலைப் பாதையில் அணி வகுத்து நின்றிருந்த கனரக வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக தமிழகம் - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.