பயோமெட்ரிக் குளறுபடி: பொதுமக்கள் போராட்டம்

அம்மாபேட்டை அருகே நியாயவிலைக் கடையில் பயோமெட்ரிக் குளறுபடியால் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்த பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

பவானி: அம்மாபேட்டை அருகே நியாயவிலைக் கடையில் பயோமெட்ரிக் குளறுபடியால் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்த பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை அருகேயுள்ள சிங்கம்பேட்டை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பொருள்களை வாங்கி வருகின்றனா். இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டதால் பொருள்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதலே பொருள்கள் வாங்க 100க்கும் மேற்பட்டோா் வந்து காத்திருந்தனா்.

அப்போது, பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பவானி - மேட்டூா் சாலையில் சிங்கம்பேட்டை அருகே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, உயா் அதிகாரிகளுக்குத் தெரிவித்து பொருள்கள் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com