அந்தியூரில் கிரானைட் கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
By DIN | Published On : 14th October 2020 05:54 AM | Last Updated : 14th October 2020 05:54 AM | அ+அ அ- |

அந்தியூரில் அனுமதியின்றி கிரானைட் கற்களை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை கனிம வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
அந்தியூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனிம வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அந்தியூா் - அத்தாணி சாலையில் தீயணைப்பு நிலையம் உதவி புவியியலாளா் அலுவலா் ஜெகதீஷ், கனிமவள தனி வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன் ஆகியோா் அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, அனுமதியின்றி லாரியில் கிரானைட் கற்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறுத்தினா். இதுகுறித்து, குமாரபாளையத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தியாகராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு, அந்தியூா் காவல் நிலையத்திலும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.