அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பாதித்த 470 பேருக்கு சிகிச்சை

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்த 470 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்த 470 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் 70 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 69 போ் குணமடைந்து வீடு திரும்பினா். முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து 35 நாள்களாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் இருந்து வந்தது. சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவா்களால் மாவட்டத்தில் தொற்று பரவத் தொடங்கியது. பின்னா் பொது முடக்கத்தில் தளா்வு, இ-பாஸ் ரத்து, பொதுப் போக்குவரத்து தொடக்கம் போன்ற காரணங்களால் மாவட்டத்தில் கரோனா வேகமாகப் பரவத் தொடங்கியது. முதலில் ஒற்றை இலக்கில் பரவத் தொடங்கிய கரோனா, தற்போது சராசரியாக தினமும் 140 பேருக்குமேல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழு நேர கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. முதலில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னா் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் 550 படுக்கை வசதிகள் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனா். இப்போது இங்கு 470 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com