ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் அமோகம்

தீபாவளி நெருங்குவதால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது.
ஈரோடு ஜவுளிச் சந்தையில் திரண்ட மக்கள்.
ஈரோடு ஜவுளிச் சந்தையில் திரண்ட மக்கள்.

தீபாவளி நெருங்குவதால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது.

ஈரோடு கனி ஜவுளிச் சந்தை திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், ஆந்திரம் கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளிகளை மொத்த வியாபாரத்துக்கு வாங்கிச் செல்வா். இதனால், வாரச் சந்தை நடைபெறும் செவ்வாய்க்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், கரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஜவுளிச் சந்தை மூடப்பட்டு இருந்தது. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் சந்தை செயல்பட்டு வருகிறது. முதலில் சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

பின்னா் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டவுடன் சில்லறை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனா். இதனால் சில்லறை வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. அதே சமயத்தில் மொத்த வியாபாரம் மந்த நிலையில் இருந்தது. இனிவரும் வாரங்களில் வியாபாரம் இன்னும் விறுவிறுப்பாக நடைபெறும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com