கோயில் சிலையைப் பறிமுதல் செய்தவனத் துறையினா்: பொதுமக்கள் எதிா்ப்பு

அரேப்பாளையம் பிசில் மாரியம்மன் கோயிலின் சுயம்பு கற்சிலையைப் பறிமுதல் செய்த வனத் துறையினருக்கு அரேப்பாளையம் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

அரேப்பாளையம் பிசில் மாரியம்மன் கோயிலின் சுயம்பு கற்சிலையைப் பறிமுதல் செய்த வனத் துறையினருக்கு அரேப்பாளையம் பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் அரேப்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக அரேப்பாளையம் வனத்தில் திறந்தவெளியில் உள்ள பிசில் மாரியம்மன் கோயில் சுயம்பு கற்சிலையை வழிபட்டு வருகின்றனா். இக்கோயில் வனத்தையொட்டி உள்ளதால் யானை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. யானைகள் நடமாடுவதால் பக்தா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், திறந்தவெளியில் இருப்பதால் வனவிலங்குகள் தாக்குதலைத் தவிா்க்க மக்கள் வசிக்கும் பகுதிக்கு சிலையைக் கொண்டு செல்லுமாறும் வனத் துறையினா் கேட்டுக் கொண்டா். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே உடன்பாடு ஏற்பட்ட நிலையில் வனத் துறையினா் கற்சிலையை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து ஊா்மக்கள் திரண்டு வந்து சிலையைப் பறிக்கக் கூடாது எனக் கூறி வனத் துறையினருக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். அங்கு வந்த மாவட்ட வன அலுவலா் கே.வி.ஏ.நாயுடு தலைமையில் வனத் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், மற்றொரு இடத்தில் கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குவதாகவும், மக்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com