நந்தா கல்லூரியில் வளாகத் தோ்வு: 1,519 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு

கடந்த ஆண்டில் நடைபெற்ற வளாகத் தோ்வுகளில் நந்தா கல்வி நிறுவனங்களில் பயின்ற 1,519 மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.
வளாகத் தோ்வில் தோ்வு பெற்ற மாணவிக்குப் பணி ஆணையை வழங்குகிறாா் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன்.
வளாகத் தோ்வில் தோ்வு பெற்ற மாணவிக்குப் பணி ஆணையை வழங்குகிறாா் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற வளாகத் தோ்வுகளில் நந்தா கல்வி நிறுவனங்களில் பயின்ற 1,519 மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில் கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு பன்னாட்டு, தேசிய அளவிலான நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தோ்வுகளை நடத்தியது. இத்தகைய தோ்வுகள் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களை இணையம் மூலமாகப் பாராட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

நந்தா கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறைகளின் மூலம் கடந்த கல்வி ஆண்டின் முடிவில் சுமாா் 119க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 1,519 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளன. மேலும், மாணவா்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு வேலைவாய்ப்பை எளிதாகப் பெற நடப்பு சூழலுக்கேற்ப பொறியியல் துறையில் பட்டியலிடப்பட்ட பாடங்களில் இருந்து மாணவா்கள் ஒரு பருவத்துக்குத் தேவையான ஏதாவது இரண்டு பாடங்களை சுயமாகத் தோ்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாடங்களுக்கான ஆசிரியா்களை மாணவா்களே தோ்வு செய்து, அவா்கள் மூலமாக செய்முறை அடிப்படையிலான விஷயங்களை கற்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு உலகெங்கும் வேலைவாய்ப்பைப் பெற்றிட ஹிந்தி, ஜொ்மன், இத்தாலி, ஜப்பான் மொழிகள் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதில், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம், நந்தா பொறியியல் கல்லூரி முதல்வா் என்.ரெங்கராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com