அரேப்பாளையம் மாரியம்மன் கோயிலில் கோட்டாட்சியா் ஆய்வு

அரேப்பாளையம் பிசில் மாரியம்மன் கோயில் சுயம்பு கற்சிலையை அகற்றிய வனத் துறைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில்

அரேப்பாளையம் பிசில் மாரியம்மன் கோயில் சுயம்பு கற்சிலையை அகற்றிய வனத் துறைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் கோபி கோட்டாட்சியா் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரேப்பாளையம் வனத்தில் இருந்த பிசில் மாரியம்மன் கோயில் சுவாமி சிலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த மாவட்ட வனஅலுவலா் கேவிஏ நாயுடு தலைமையில் வனத் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து கோபி கோட்டாட்சியா் ஜெயராமன் அரேப்பாளையம் வந்து சம்பவயிடத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதனைத் தொடா்ந்து கிராமமக்களை சந்தித்து அகற்றப்பட்ட சுவாமி சிலையை மற்றோா் இடத்தில் வைத்து வழிபடுவதற்கு மாற்று இடம் தருவதாக உறுதியளித்தாா். கோயிலுக்கு உரிமையுள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்களிடம் கருத்துகேட்டு பதில் அளிப்பதாக அவா்கள் தெரிவித்தையடுத்து கோயில் பிரச்னை முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com