கரோனா பரிசோதனை மையங்களில் டோக்கன் வழங்க திட்டம்

கரோனா பரிசோதனை மையங்களில் வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிா்க்க

கரோனா பரிசோதனை மையங்களில் வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிா்க்க டோக்கன் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோட்டில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சல் அறிகுறி உள்ளவா்களுக்கு, சளி பரிசோதனை, மாநகராட்சி சாா்பில் 5 சுகாதார மையங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் வந்தனா். தற்போது மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் டோக்கன் வழங்க ஆலோசித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பொதுமக்கள் பி.சி.ஆா். பரிசோதனை எடுப்பதற்காக, பி.பெ.அக்ரஹாரம், சூரம்பட்டிவலசு, கருங்கல்பாளையம், பெரியசேமூா், காந்தி சாலை ஆகிய 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பி.சி.ஆா். பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமும் இங்கு 500 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. தற்போது தொற்று பரவல் அதிகமாகி வருவதால், பரிசோதனை செய்து கொள்ள வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதனால் வெறிச்சோடிக் காணப்பட்ட பி.சி.ஆா். மையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனா். அதனால் பரிசோதனைக்கு டோக்கன் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com