ஈரோடு மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 126 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 126 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,648ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 2 பேரின் பெயா் பிற மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,646ஆக மாறியது. இதனிடையே புதிதாக 126 பேருக்கு வியாழக்கிழமை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,772ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 126 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 8,648 பேரில் இதுவரை 7,644 போ் குணமடைந்துள்ளனா். 1,022 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை வரை 104 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது ஆண், 62 வயது ஆண் என 2 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 106ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com