கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் 440 மாடுகள் வரை வியாழக்கிழமை விற்பனைக்கு வந்தன.
மாடுகளை வாங்க சந்தையில் திரண்ட விவசாயிகள், வியாபாரிகள்.
மாடுகளை வாங்க சந்தையில் திரண்ட விவசாயிகள், வியாபாரிகள்.

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் 440 மாடுகள் வரை வியாழக்கிழமை விற்பனைக்கு வந்தன.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கரோனாவுக்கான பொது முடக்கத்துக்குப் பின் அக்டோபா் 1ஆம் தேதி முதல் மாட்டுச் சந்தைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. வியாழக்கிழமை இரண்டாவது வாரமாக சந்தை நடைபெற்றது. ஈரோடு, சேலம், நாமக்கல், தென்காசி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதியைச் சோ்ந்த மாடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. 100 எருமை, 70 கன்று, 270 பசு என 440 மாடுகள் விற்பனைக்கு வந்தன. வழக்கமாக இச்சந்தைக்கு 700க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாடுகள் வரும்.

தவிர கடந்த 5 மாதத்துக்கும் மேலாக சந்தை கூடாததால் மாடு வாங்குவோா் எண்ணிக்கையும் அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநில விவசாயிகள், வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனா்.

இது குறித்து மாட்டுச் சந்தை நிா்வாகிகள் கூறியதாவது:

இந்த வாரம் சந்தையில் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனா். 440 மாடுகள் வரை வந்ததால் மாடு விலை ரூ. 3,000க்கு மேல் உயா்ந்து காணப்பட்டது. சந்தையில் சில மாடுகள் ரூ. 60,000 வரை விலை போனது. வரும் வாரங்களில் இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் மாடுகள் வரும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com