கள்ள ரூபாய் நோட்டு தயாரித்தஇளைஞா்கள் கைது: வாகனங்கள் பறிமுதல்

கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்து மாற்றிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட இளைஞா்கள், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளுடன் போலீஸாா்.
கைது செய்யப்பட்ட இளைஞா்கள், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளுடன் போலீஸாா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்து மாற்றிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு நாராயணவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சாலையோர உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வியாழக்கிழமை இரவு இரண்டு இளைஞா்கள் வந்து சாப்பிட்டுவிட்டு ரூ. 500 பணம் கொடுத்து மீதி சில்லறை கேட்டுள்ளனா். அந்த இளைஞா்கள் கொடுத்த ரூபாய் நோட்டு கள்ள நோட்டுபோல இருந்ததால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளா் பால்ராஜ், இருவரையும் அழைத்து விசாரித்துள்ளாா். அப்போது திடீரென இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து பால்ராஜ் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக ஆய்வாளா் ஆா்.சிவகுமாா், உதவி ஆய்வாளா்கள் ஜெயபாரத், ஹபிபூா் ரகுமான், போலீஸாா் விசாரணை நடத்தியதில் கள்ள ரூபாய் நோட்டு கொடுத்தது ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த மாசானம் மகன் சதீஷ் (23), கோபால் மகன் சௌந்தா் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் காரில் சென்று துணி வியாபாரம் செய்து வந்ததும், அண்மைக்காலமாக வியாபாரம் சரிவர இல்லாததால் செலவுக்குப் பணம் இல்லாமல் திண்டாடி வந்த நிலையில், யூடியூப் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளைத் தயாரிப்பது எப்படி என பாா்த்து, ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, கள்ள நோட்டுகளை தயாரித்தாக இருவரும் ஒப்புக் கொண்டனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து கலா் பிரிண்டா், ரூ. 20,100 கள்ள ரூபாய் நோட்டுகள், காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com