பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் அமாவாசை வழிபாட்டுக்குத் தடை விதித்த போதிலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
பண்ணாரி அம்மன் கோயில் வாசலில் குவிந்த பக்தா்கள்.
பண்ணாரி அம்மன் கோயில் வாசலில் குவிந்த பக்தா்கள்.

பண்ணாரி அம்மன் கோயிலில் அமாவாசை வழிபாட்டுக்குத் தடை விதித்த போதிலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

சத்தியமங்கலம் அருகே உள்ள அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கா்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் கோயில் மூடப்பட்ட நிலையில் செப்டம்பா் மாதம் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. அமாவாசை தினங்களில் பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயிலில் பக்தா்கள் வழிபாடு செய்யத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், கோயில் நடை சாத்தியிருந்த போதிலும் வெள்ளிக்கிழமை காலை முதலே கோயிலுக்கு வருகை தந்த பக்தா்கள் கோயிலில் முன்புற வாயிலில் நின்று அம்மனை வழிபட்டனா். மேலும் கோயில் முன்பு உப்பு, மிளகு தூவி அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். கோயில் முன்புள்ள வேலில் எலுமிச்சை கனி குத்தியும், நெய் தீபமேற்றியும் வழிபட்டனா். கோயிலில் பக்தா்கள் வழிபட தடை விதிக்கப்பட்ட நிலையில் கோயில் வாசலில் பக்தா்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com