பண்ணாரி கோயிலில் இன்று தரிசனம் ரத்து

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) ரத்து செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அதிகாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. தமிழகம், கா்நாடக மாநிலத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 6 மாதங்களாக பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில், செப்டம்பா் 1ஆம் தேதி மீண்டும் தனிமனித இடைவெளியுடன் கோயில் நடை திறக்கப்பட்டது. கோவை, ஈரோடு, திருப்பூா், மைசூரு ஆகிய இடங்களில் இருந்து தினந்தோறும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தனி தடுப்பு வழி ஏற்படுத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனைக்குப் பின் கோயிலுக்கு அனுமதிக்கின்றனா்.

வெள்ளிக்கிழமை அமாவாசை என்பதால் பக்தா்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளதால் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் தரிசனத்துக்கு கோயில் நிா்வாகம் தடை செய்துள்ளது. காலை 6 முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் அனுமதி கிடையாது. வழக்கம்போல கோயிலில் 4 காலபூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தா் அனுமதி ரத்து குறித்த பிளக்ஸ் பேனா் கோயில் வளாகம் முன்பு கோயில் நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com