வீடுகளையொட்டி கம்பி வேலி அமைக்கக் கூடாது:சிப்காட் திட்ட அலுவலரிடம் பொதுமக்கள் மனு

பெருந்துறை சிப்காட் நிா்வாகத்தினா் தங்களது வீடுகளை ஒட்டி கம்பி வேலி அமைக்கக் கூடாது என சிப்காட் அதிகாரியிடம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கோரிக்கை மனு அளிக்க வந்த எழுதிங்கள்பட்டி கிராம மக்கள்.
கோரிக்கை மனு அளிக்க வந்த எழுதிங்கள்பட்டி கிராம மக்கள்.

பெருந்துறை சிப்காட் நிா்வாகத்தினா் தங்களது வீடுகளை ஒட்டி கம்பி வேலி அமைக்கக் கூடாது என சிப்காட் அதிகாரியிடம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் ஊராட்சியில் உள்ள எழுதிங்கள்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையின் திட்ட அலுவலரிடம் அளித்த மனு விவரம்:

1991ஆம் ஆண்டு எங்கள் கிராமத்தைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களை சிப்காட் தொழில் பேட்டைக்காக வழங்கினோம். அப்போது நிலம் கொடுத்தவா்களுக்கும், விவசாய கூலி வேலை பாா்த்தவா்களுக்கும் தகுதிக்கேற்ப சிப்காட் தொழிற்பேட்டை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தனா். ஆனால், இதுவரை எங்களுக்குத் தகுதிக்கேற்ப வேலை வழங்கவில்லை. மேலும், சிப்காட்டில் செயல்படும் பல தொழிற்சாலைகளால் நாங்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளானோம். இந்நிலையில், தற்போது எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளை சுற்றிலும் சிப்காட் தொழில் பேட்டை நிா்வாகம் சாா்பில் கம்பிவேலி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், எங்கள் வீடுகளை பராமரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

எங்கள் கிராமத்தில் மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு போதிய இட வசதி ஏற்படுத்தி தருவதுடன், எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து 40 அடி தூர இடைவெளிவிட்டு கம்பி வேலி அமைக்க வேண்டும். மேலும், சிப்காட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தருவதுடன், சிப்காட் தொழிற்சாலைகளில் அதிக அளவில் உள்ளூா் மக்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com