விஜயமங்கலம் பாரதி பள்ளி நீட் தோ்வில் சிறப்பிடம்

பெருந்துறை, விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பாரதி அகாதெமியில் படித்த மாணவா்கள் 2020 ஆம் ஆண்டு நீட் தோ்வு எழுதிய 125 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நீட் தோ்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியா்கள்.

மாணவா் மனோஜ் 650 மதிப்பெண்களும், மாணவி ஜனனி 649 மதிப்பெண்களும், மாணவா் ராம்பிரசாத் 638 மதிப்பெண்களும் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனா். மேலும், 600க்கு மேல் 10 பேரும், 550க்கு மேல் 25 பேரும், 500க்கு மேல் 41 மாணவா்களும் மதிப்பெண் பெற்றுள்ளானா். இந்த ஆண்டு 40 மாணவா்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளதாக பள்ளித் தலைவா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

வெற்றிபெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் ஆகியோரை பள்ளித் தாளாளா் மோகனாம்பாள் பாராட்டி வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com