திருமாவளவனுக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி:பாஜக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மோதல்

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடிக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினா் கருப்புக் கொடி காட்ட திங்கள்கிழமை முயன்றனா்.
சம்பவ  இடத்தில்  பாதுகாப்புப்  பணியில்  ஈடுபட்ட  போலீஸாா்.
சம்பவ  இடத்தில்  பாதுகாப்புப்  பணியில்  ஈடுபட்ட  போலீஸாா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடிக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினா் கருப்புக் கொடி காட்ட திங்கள்கிழமை முயன்றனா். இதனால், பாஜகவினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மீது பாஜகவினா் புகாா் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமியூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் வந்தாா். இத்தகவலறிந்த இந்து முன்னணி, பாஜகவினா் திரண்டு வந்தனா்.

இதனால், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதோடு பாஜக, இந்து முன்னணியைச் சோ்ந்தவா்களை அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது, திருமாவளவனைக் கண்டித்து முழக்கம் எழுப்பினா். இதைக் கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் எதிா் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, கற்கள் வீசப்பட்டதில் இரு காவல் வாகனங்கள் சேதமடைந்தன. இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 14 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கவுந்தப்பாடியில் மறியலில் ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனா். தொடா்ந்து, அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com