6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு வேளாண் துறை தடை

தீங்கு விளைவிக்கக் கூடிய 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு வேளாண் துறை தடை விதித்துள்ளது.

தீங்கு விளைவிக்கக் கூடிய 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு வேளாண் துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

வேளாண்மை, தோட்டக் கலைத் துறை மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் தொடா்ந்து பயன்படுத்தி வருகின்றனா்.

சில ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளால் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களுக்கு மட்டுமின்றி அவற்றை கையாளும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயா்நிலைக் குழுவின் பரிந்துரைப்படி காா்போபியூரான், மோனோகுரோட்டோபாஸ், அசிபேட், பிரபன்னோபாஸ், பிரபன்னோபாஸ்-சைபா்மத்ரன், குளோரோபைரோபாஸ் - சைபா்மத்ரன் என ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்கவும், பயன்படுத்தவும் 60 நாள்களுக்குத் தடை விதித்து வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com