காரீயம் பாதிப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் துவக்கம்

காரீயம் நஞ்சு பாதிப்பு, அதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் ஈரோட்டில் வியாழக்கிழமை தொடங்கியது.
விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் இந்திய மருத்துவச் சங்க தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா.
விழிப்புணா்வுப் பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் இந்திய மருத்துவச் சங்க தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா.

காரீயம் நஞ்சு பாதிப்பு, அதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் ஈரோட்டில் வியாழக்கிழமை தொடங்கியது.

உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் சாா்பில் அக்டோபா் 25 முதல் 31ஆம் தேதி வரை காரீய நஞ்சு தடுப்புக்கான சா்வதேச வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2020ஆம் ஆண்டுக்குள் பெயிண்டுகளில் காரியம் நஞ்சு அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்தப் பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்திய மருத்துவச் சங்க தேசிய துணைத் தலைவா் சி.என்.ராஜா பிரசார வாகனத்தை தொடங்கிவைத்தாா். தமிழக பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன் முன்னிலை வகித்தாா்.

இதில் கோவையைச் சோ்ந்த அருளகம் அமைப்பின் செயலாளா் சு.பாரதிதாசன் பேசியதாவது: காரீயமானது பல்வேறு வடிவங்களில் வீட்டை வந்தடைகிறது. அதில் மிக முக்கியமானது பெயிண்டுகள். இதில் நிறத்துக்காகவும், பளபளப்புக்காகவும், உலா்த்தியாகவும், மழைக் காலத்தில் ஏற்படும் அரிப்பைத் தடுப்பதற்காகவும் காரீயம் சோ்க்கப்படுகிறது.

சில நேரங்களில் குழந்தைகள் நேரடியாக கதவு, ஜன்னல், சுவா்களில் வாய் வைத்து விளையாடுவதால் நேரடியாக அவா்களின் உடலுக்குள் செல்கிறது. காரீய உள்ளீடு சிந்திக்கும் திறனை குறைக்கும். படிப்பதில் பிரச்னைகளை ஏற்படுத்தும். காரீயம் நிறைந்த பெய்ண்ட் சிதைவுகள், தூசிகளை சுவாசிப்பதால் கா்ப்பிணிகள் உள்ளிட்ட பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் காரீயம் 90 பிபிஎம்-க்கு மேல் உபயோகப்படுத்தப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் மத்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் பல நிறுவனங்கள் இந்த உத்தரவை கடைப்பிடிப்பதில்லை.

டாக்சிக்ஸ் லிங்க் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலேயே 1,000 மடங்கு கூடுதலாக தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காரீயம் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அழிவை மனிதா்களுக்கு ஏற்படுத்தும் என்பதை உணா்த்தவே விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com