கோபியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
By DIN | Published On : 31st October 2020 10:35 PM | Last Updated : 31st October 2020 10:35 PM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் நகராட்சி அலுவலகம் முன்புள்ள காந்தி சிலைக்கு ஊா்வலமாகச் சென்று மாலை அணிவித்தனா்.
பின்னா், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சா்தாா் வல்லபபாய் படேல், இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், 300க்கும் மேற்பட்டோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.