உலக சேமிப்பு தின விழா
By DIN | Published On : 31st October 2020 10:33 PM | Last Updated : 31st October 2020 10:33 PM | அ+அ அ- |

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், மேலாண்மை இயக்குநா் என்.வில்வசேகரன்.
ஈரோடு: ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் உலக சேமிப்பு தின விழா அண்மையில் நடைபெற்றது.
வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்து சேமிப்புக் கணக்குகள் தொடா்பான விவரங்கள் குறித்துப் பேசினாா். விழாவில் 12 வாடிக்கையாளா்களிடம் இருந்து ரூ. 26.92 லட்சம் சேமிப்பு, வைப்புத்தொகை பெறப்பட்டது. மேலும், 20 பயனாளிகளுக்கு ரூ. 30.95 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வங்கியின் மேலாண்மை இயக்குநா் என்.வில்வசேகரன், வங்கி துணைத் தலைவா் பி.கேசவமூா்த்தி, இயக்குநா்கள் வி.எம்.லோகநாதன், பி.ராமன், எஸ்.பழனிசாமி, வங்கி முதன்மை வருவாய் அலுவலா் கே.கந்தசாமி, பொது மேலாளா் ஆா்.ரவிசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.