பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

பவானியில் சங்கமேஸ்வரா் கோயில், செல்லியாண்டியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் பக்தா்களின் வழிபாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
சிறப்பு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  செல்லியாண்டியம்மன்.
சிறப்பு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  செல்லியாண்டியம்மன்.

பவானியில் சங்கமேஸ்வரா் கோயில், செல்லியாண்டியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் பக்தா்களின் வழிபாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

பவானியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், வழிபாட்டுத் தலமாகவும் திகழும் சங்கமேஸ்வரா் கோயில், காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பரிகாரத் தலமான கூடுதுறை கோயில்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

முன்னதாக, பக்தா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவிய பின்னரே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றியே வழிபாடு நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனா். பக்தா்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னா் இறைவனைத் தரிசனம் செய்து உற்சாகத்துடன் வழிபாடு நடத்தினா்.

கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டபோதிலும், கூடுதுறையில் பரிகாரம், மூத்தோா் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அரசின் விதிமுறைகளுக்கேற்ப பரிகார வழிபாடுகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com