பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகளை இயக்க கொமதேக கோரிக்கை

அடித்தட்டு மக்களி ன் நிலையை அறிந்து பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டாா்.

அடித்தட்டு மக்களி ன் நிலையை அறிந்து பிற மாவட்டங்களுக்குப் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

பல்வேறு தளா்வுகளுடன் தமிழகத்தில் மாவட்டத்துக்குள் பேருந்து இயக்கம் துவங்கி உள்ளது. பிற மாவட்டத்துக்குப் பேருந்து இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள் ஒரு மாவட்ட எல்லை வரை பயணித்து வெகுதூரம் நடந்து அடுத்த மாவட்டத்துக்குச் செல்ல இயலாது. ஒரு மாவட்டத்துக்குள் பயணித்தால் கரோனா பரவாது என்றும், பிற மாவட்டம் சென்றால் பரவும் என்ற அச்சத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் விவசாயப் பணி, தொழிற்சாலை பணி, கட்டுமானம் என எந்த பணிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். அடித்தட்டு மக்களின் நிலையைப் புரிந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

பொது முடக்கத்தால் வேலை, வருவாயை மக்கள் இழந்த நிலையில், மின் வாரியத்துக்கு கூடுதல் வைப்புத் தொகை கட்ட வேண்டும் என நிா்பந்திப்பது நியாயமல்ல. தொழிற்சாலைகள் 5 மாதத்துக்குமேல் செயல்படாமல் தற்போதுதான் முழு அளவில் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பல ஆயிரம் ரூபாயை வைப்பு நிதியாக வைக்க வலியுறுத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவா்.

அதேபோல, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி கட்டணத்தை உயா்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. மக்களின் பொருளாதார சூழல் மோசமாக உள்ள நிலையில் அனைத்து வங்கிக் கடன் தவணை, வட்டியைச் செலுத்த மேலும் 6 மாதகால அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com