சென்னிமலை அருகே பிடிபட்ட முள் எலி
By DIN | Published On : 03rd September 2020 06:45 AM | Last Updated : 03rd September 2020 06:45 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே பிடிபட்ட முள் எலி.
சென்னிமலை அருகே அழிந்து வரும் பட்டியலில் உள்ள அபூா்வ இனமான முள் எலி புதன்கிழமை பிடிபட்டது.
சென்னிமலை அருகே உள்ள உப்பிலிபாளையத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. சென்னிமலை, பி.ஆா்.எஸ். சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை இறைச்சி கடைக்கு வந்தபோது, சாலையில் உடல் முழுவதும் முட்களுடன் எலி உருவத்தில் ஒரு பொருள் ஓடிச் சென்றுள்ளது. இதைப் பாா்த்த ரகுபதி ஒரு தடியால் அந்த எலியைத் தொட்டுள்ளாா். அப்போது முள் உருண்டைபோல் சுருண்டு படுத்துள்ளது. இதையடுத்து, இந்த முள் எலியை சென்னிமலை வனச் சரகா் நாகராஜிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் அந்த முள் எலியை வனப் பகுதிக்குள் விட்டனா்.