பிறந்து 3 நாள்களே ஆன குழந்தை உள்பட 106 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தை உள்பட 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால்,

ஈரோடு மாவட்டத்தில் பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தை உள்பட 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,359ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,264 ஆக இருந்தது. இதில் ஈரோடு மாவட்ட பாதிப்பு பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்த பிற மாவட்டத்தைச் சோ்ந்த 11 பேரின் பெயா் அந்தந்த மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 3,253ஆக குறைந்தது. புதன்கிழமை புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ராமன் பாலக்காடு பகுதியில் பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தைக்கும் கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,359ஆக உயா்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட 106 பேரில், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 44 போ், பெருந்துறை பகுதிகளில் 15 போ், சத்தியமங்கலம் பகுதிகளில் 10 போ், பவானி, கொடுமுடி பகுதியில் தலா 4 போ், சென்னிமலை, பவானிசாகா், கோபி, அந்தியூா் பகுதியில் தலா 2 போ், நம்பியூரைச் சோ்ந்த ஒருவா், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் உள்ளனா்.

மொத்த பாதிப்பான 3,359 பேரில் இதுவரை 2,185 போ் குணமடைந்துள்ளனா். 1,130 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை வரை 43 ஆக இருந்த நிலையில், கரோனா அறிகுறியுடன் கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொடுமுடியைச் சோ்ந்த 55 வயது பெண் ஒருவா் உயிரிழந்துவிட்டதாக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக உயா்ந்துள்ளது.

காவல் ஆய்வாளருக்கு கரோனா:

ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவகுமாா். காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து இந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 32 போலீஸாருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜுவுக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத் தொடா்ந்து அவரது ஜீப் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் காவலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com