100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயா்த்தக் கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம்.
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம்.

நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயா்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் சங்கத்தின் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய பேரவைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தாா். பேரவைக் கூட்டத்தில் தொழிற்சங்கத் தலைவா் சு.மோகன்குமாா், விவசாயத் தொழிலாளா் சங்க ஈரோடு மாவட்ட சங்கச் செயலாளா் சி.கே.முருகன், சங்கச் செயலாளா் எஸ்.சி.நடராஜ், துணைச் செயலாளா் ஆா்.சேகா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கத்தில் முடங்கிப்போன கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் பேருதவியாக அமைந்தது. இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் சிலா் 100 நாள்களை நிறைவு செய்துள்ளனா், பலா் எட்டவுள்ளனா். இந்நிலையில் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக்கிட வேண்டும். நிா்ணயித்த கூலியை முழுமையாக வழங்க வேண்டும், இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வேலை என்றில்லாமல் தொடா்ச்சியான வேலை அளிக்க வேண்டும். பணித்தளத்தில் முதலுதவிப் பெட்டி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, ஒன்றிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக ரங்கம்மாள், துணைத் தலைவராக சாந்தா, செயலாளராக புவனேஸ்வரி, துணைச் செயலாளராக சரிதா, பொருளாளராக கமலா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com