நிச்சாம்பாளையத்தில் கால்நடை மருந்தகம் திறப்பு
By DIN | Published On : 10th September 2020 06:59 AM | Last Updated : 10th September 2020 06:59 AM | அ+அ அ- |

நிச்சாம்பாளையத்தில் புதிய கால்நடை மருந்தக கிளை நிலையத்தைத் திறந்துவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம் கிராமத்தில் புதிய கால்நடை மருந்தகக் கிளை நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட கால்நடை இணை இயக்குநா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கிளை நிலையத்தை திறந்துவைத்தாா்.
இதில், மாவட்ட கால்நடை உதவி இயக்குநா் குமாரரத்தினம், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.