ரூ. 88 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
By DIN | Published On : 10th September 2020 06:58 AM | Last Updated : 10th September 2020 06:58 AM | அ+அ அ- |

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 88 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,761 மூட்டைகளில் 82,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 105.51க்கும், அதிகபட்சமாக ரூ. 113.50க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 62.69க்கும், அதிகபட்சமாக ரூ. 110.80க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 88 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.