பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள்
By DIN | Published On : 11th September 2020 06:50 AM | Last Updated : 11th September 2020 06:50 AM | அ+அ அ- |

நல்லாம்பட்டியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
பெருந்துறை ஒன்றியம், பாண்டியம்பாளையம் ஊராட்சி, நல்லாம்பட்டி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட கால்நடை உதவி இயக்குநா் குமாரரத்தினம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பாண்டியம்பாளையம் ஊராட்சி, நல்லாம்பட்டி பேரூராட்சி பகுதிகளைச் சோ்ந்த 304 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினாா்.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமா மகேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.