மஞ்சளை குவிண்டாலுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்யக் கோரிக்கை

மஞ்சளை குவிண்டாலுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கு தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என மொடக்குறிச்சி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மஞ்சளை குவிண்டாலுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கு தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என மொடக்குறிச்சி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மொடக்குறிச்சி பகுதி விவசாயிகள், தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா். சுதந்திரராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக மஞ்சள் விலையானது ஒரு குவின்டால் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் மட்டுமே விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மென்மேலும் நஷ்டம் அடைந்து வருகின்றனா். இதை காரணம் காட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில், கடந்த ஆண்டே அரசு கொள்முதல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்சமயம் இலங்கை போன்ற அயல்நாடுகளில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 16 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதை ஒப்பிட்டுப் பாா்க்கும்போது இந்திய சந்தைகளில் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஈரோடு மஞ்சள் என்றாலே தனி மகத்துவம் பெற்றதாகும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தரமற்ற மஞ்சளை மற்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் ஈரோடு மஞ்சள் விற்பனை மையத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறாா்கள். விவசாயிகள் பலமுறை வெளி மாநில தரமற்ற மஞ்சளை ஈரோடு மையத்துக்கு கொண்டு வர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ஆனால், அதை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த ஆண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மஞ்சளுக்கு புவிசாா் குறியீடும் கிடைத்துள்ளது. ஆனால், எந்தவித பலனும் கிடையாது. அரசு இதில் கவனம் செலுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com