வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அரசு தளா்த்தியுள்ள நிலையில், செப்டம்பா் 7ஆம் தேதி முதல் மாவட்டம்விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோடு மண்டலத்தில் இருந்து கோவை, திருப்பூா், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமாா் 60 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதன்கிழமை முதல் ராமேஸ்வரம், திருச்செந்தூா், திருநெல்வேலி, தேனி, கம்பம், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதன்படி ஈரோடு மண்டலத்தில் இப்போது இயக்கப்பட்டு வரும் 275 பேருந்துகளில் சுமாா் 100 பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. தவிர மதுரை, கும்பகோணம், சேலம் கோட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு சுமாா் 150 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வார இறுதி நாள்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அரசுப் போக்குவத்துக்கழக ஈரோடு மண்டல அதிகாரிகள் தெரிவித்ததாவது:

வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இப்போது சுமாா் 100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சனிக்கிழமை காலை முதல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேலும் 30 பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளன என்றாா்.

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு பேருந்து:

கோவை, கோபியில் இருந்து ஈரோடு வழியாக புதன்கிழமை இரவு முதல் சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல திருநெல்வேலி, நாகா்கோயில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் ஈரோடு வழியாக விரைவில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com