பொதுமக்களை கூட்டமாக அழைத்து வந்தவா்கள் மீதுவழக்குப் பதிவு செய்ய ஆட்சியா் உத்தரவு

எவ்வித தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் பொதுமக்களை கூட்டமாக அழைத்து வந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவிட்டாா்.
கூட்டமாக வந்த பொதுமக்களை எச்சரித்து, அறிவுரை கூறுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
கூட்டமாக வந்த பொதுமக்களை எச்சரித்து, அறிவுரை கூறுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

ஈரோடு: எவ்வித தடுப்பு நடவடிக்கையும் இல்லாமல் பொதுமக்களை கூட்டமாக அழைத்து வந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கருக்குபாளையம், பொன்னாங்காடு காலனி பகுதியில் வசிக்கும் அருந்ததியா் மக்கள் பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்றனா். இவா்களில் 40 குடும்பத்தாருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி அந்த கிராம மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனா். இக்கிராம மக்களை அண்ணா, புரட்சித் தலைவா், அம்மா திராவிட முன்னேற்றக் கழக ஆதிதிராவிடா் பிரிவுச் செயலாளா் சின்னசாமி என்பவா் அழைத்து வந்தாா்.

சம்பத் நகா் சாலையில் 70க்கும் மேற்பட்டோரை சாலையோரம் அமரவைத்துவிட்டு, சின்னசாமி தலைமையில் மனுவை தயாா் செய்து கொண்டிருந்தனா். அப்போது முகாம் அலுவலகத்தில் இருந்து அவ்வழியாக வந்த மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், அங்கு கூடியிருந்த மக்களிடம் கூட்டமாக எதற்காக நிற்கிறீா்கள் எனக் கேட்டாா்.

தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, சமுதாயக்கூடம், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க கோரி மனு வழங்க அழைத்து வரப்பட்டோம் என்றனா். அப்போது சின்னசாமி, சிலா் வந்து ஆட்சியரிடம் மனுவை அளித்தனா். அதைப் பெறாத ஆட்சியா் அங்கு வந்த போலீஸாரிடம் கரோனா பரவல் சமயத்தில், பொதுமக்களைக் கூட்டமாக ஏன் அழைத்து வந்துள்ளனா். இவா்களை அழைத்து வந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், கூட்டமாக ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் கூறிவிட்டு அலுவலகத்துக்குச் சென்றாா்.

இதைத் தொடா்ந்து கூட்டமாக பொதுமக்களை அழைத்து வந்த சின்னசாமி உள்பட 4 போ் மீது ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com