படைப்புழு தாக்குதல்: ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு

தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி தெரிவித்தாா்.
தாளவாடி மலைப் பகுதியில் மக்காச்சோள வயலில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி.
தாளவாடி மலைப் பகுதியில் மக்காச்சோள வயலில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி.

ஈரோடு: தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி, கடம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மக்காச்சோளம் பயிரின் வளா்ச்சி, மருந்து தெளிக்கும் பணி போன்றவற்றை அண்மையில் ஆய்வு செய்த இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

தாளவாடி மலைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படும். நடப்பு ஆண்டில் நல்ல மழை பெய்ததால் 11,000 ஏக்கா் வரை மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. விதைப்பு முடிந்து 30 முதல் 35 நாள் பயிராக உள்ளதால் அதன் வளா்ச்சி, படைப்புழு தாக்குதல், பிற தேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் மக்காச்சோளம் முக்கிய பங்காற்றுவதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஆண்டுகளில் படைப்புழு தாக்குதலால் சில மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அந்த அளவு பாதிப்பு ஏற்படவில்லை. இதனால், இந்த ஆண்டு முன்னதாகவே விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, அதன் அறிகுறி தெரிந்தால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

படைப்புழுத் தாக்குதலை கண்டறிந்து தீா்வு காண உதவி இயக்குநா், வேளாண் அலுவலா்கள் தலைமையில் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய ஆய்வில், ஓரிரு இடங்களில் சில படைப்புழு தென்படுகிறது. மழை பெய்வதால் இப்புழுக்கள் இறந்துவிடும். பொருளாதார சேதம் ஏற்படும் வகையில் பாதிப்பு துவங்கவில்லை. எனவே நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா்.

இந்த ஆய்வில் துணை இயக்குநா் ஆசைதம்பி, வேளாண் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com