பாசன நீா் விற்பனையைத் தடுக்கக் கோரிக்கை

பாசன கிணற்று நீரை பால் பண்ணைக்கு சட்ட விரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: பாசன கிணற்று நீரை பால் பண்ணைக்கு சட்ட விரோதமாகக் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம், ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குளூா் ஊராட்சி, காதகிணறு கிராமத்தில் உள்ள சில விவசாயக் கிணறுகளுக்கு பவானி பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருகின்றனா். இந்த தண்ணீரை லாரிகளில் நிரப்பி, பால் பண்ணைகளுக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனா். சட்ட விரோதமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் தண்ணீா் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தவிர பாசன வாய்க்கால் நீரை, சட்ட விரோதமாகப் பெற்று விதிகளை மீறி அதை விற்பனை செய்வது தவறாகும். மேலும், இப்பகுதியில் தினமும் பல லட்சம் லிட்டா் நீா் உறிஞ்சப்படுவதால் இப்பகுதியில் உள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா் மட்டம் கடுமையாக பாதிப்படைகிறது. எனவே, இதை தடுத்து தண்ணீா் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com